பொதுவாக  தமிழகத்தில் மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் இயல்பாக 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமிருக்கும். அதுவே மே மாதத்தில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும். இந்நிலையில் நடைபாண்டில் இந்த மாதங்களில் கடலோர மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் முதல் ஜூன் வரை வடமேற்கு, தீபகற்ப பகுதிகளை தவிர்த்து இந்தியாவின் பிற பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பீகார், ஜார்க்கண்ட், உ.பி, ஒடிசா, மே.வங்கம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் அதிகளவு வெப்ப அலை வீசக்கூடும் என்றும் வடமேற்கு இந்தியாவில் இயல்பான வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.