தமிழகத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது. மாம்பழம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். இந்த  நிலையில், கடைகளில் விற்பனை செய்யப்படும் மாம்பழங்களை ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைக்கப்படுவதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடைகளில் விற்பனை செய்யப்படும் மாம்பழம் ஒரே மாதிரி மஞ்சள் நிறத்தில் இருந்தால் பொதுமக்கள் வாங்கி சாப்பிட வேண்டாம். இதனால், உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என எச்சரித்துள்ளனர்