வேலூர் மாவட்டத்தில் ஜம்சித் (36) என்பவர் வசித்து வருகிறார். ‌ இவருக்கு திருமணம் ஆகி தாஹீரா பானு (33) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் நேற்று முன்தினம் திண்டிவனத்தில் உள்ள உறவினர் ஒருவரது திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மதியம் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினர். இவர்கள்  செஞ்சி அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பின்னால் அமர்ந்திருந்த தாஹீராவின் துப்பட்டா இருசக்கர வாகனத்தில் சிக்கியது.

இதில் கீழே விழுந்த அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக செஞ்சி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.