உஷார்! பகலில் குட்டித்தூக்கம் போடுபவர்களே…. இனி வேண்டாம்…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்….!!!

பகலில் குட்டித்தூக்கம் போடுவதால் ஆயுளுக்கு ஆபத்து என்ற அதிர்ச்சி தகவலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.  

பெரும்பாலும் வீட்டில் இருப்பவர்களோ, அல்லது வெளியில் வேலை செய்பவர்களோ மதிய நேரத்தில் சாப்பிட்டுவிட்டு சிறிது ஓய்வு எடுக்கும் போது தூக்கம் வரும். அப்போது சிறிதாக ஒரு குட்டித் தூக்கம் போட்டால் நன்றாக இருக்குமே என்று நாம் நினைப்பதுண்டு. அப்படி குட்டித் தூக்கம் போடுவது நம்முடைய உயிருக்கு உலை வைத்து விடுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பகலில் சில நிமிடங்கள் குட்டித் தூக்கம் போடுவது உற்சாகமூட்டும்.

ஆனால் அதுவே 40 நிமிடங்களுக்கு அதிகமானால் ஆயுளைக் குறைத்து விடும் என்கின்றனர் அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜி ஆய்வாளர்கள். பகலில் நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் வளர்சிதை மாற்ற கோளாறுகள் விளைவாக உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு, நோய்கள் அதிகரித்து ஆயுள் குறைகிறது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் தரவுகளை ஆராய்ந்து இதைக் கண்டறிந்துள்ளனர்.