
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வில்பட்டி கிராமத்தில் ஒரு பேன்சி ஸ்டோர் அமைந்துள்ளது. இங்கு ஜெய வீரன் என்ற மாற்றுத்திறனாளி மடிக்கணினியை பயன்படுத்திக் கொண்டிருந்தார். இவர் சார்ஜ் போட்டபடி லேப்டாப் உபயோகப்படுத்திய நிலையில் திடீரென வெடித்து சிதறியது.
இதில் கடையில் இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் கேனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தீ மளமளவென எரிய தொடங்கிய நிலையில் ஜெய வீரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு 40% அளவுக்கு உடம்பில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக லேப்டாப் வெடித்து சிதறியது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.