மின்சாரம் தாக்கி சமீபத்தில் பெண் ஒருவரும், குழந்தை ஒன்றும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த நிலையில் மின்சாரம் தொடர்பான அசம்பாவிதங்களை தடுக்க நாம் எவ்வித முன்னேற்பாட்டை கையாளவேண்டும் என்பதை பார்க்கலாம். இந்த காலத்தில் நாம் பயன்படுத்தும் அத்தனைப் எலக்ட்ரிக் பொருட்களுக்கும் சார்ஜ் ஏற்றும் ஒரு தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

குடும்பத்துடன் வெளியூர் செல்கையில் உங்கள் வீட்டில் உள்ள ஃபிரிஜ், ஏசி சுவிட்களை மறக்காமல் அணைத்து விட்டு செல்லுங்கள். மின்சார உபகரணத்தை பயன்படுத்தியதும், சுவிட்சை ஆப் செய்து, கையோடு ப்ளக்கை கழற்றி விடவும். தூங்கும் முன் டீவி, லேப்டாப் போன்றவற்றை அணைத்து விட்டு கையோடு ப்ளக் பாயிண்டையும் ஆப் செய்துவிட வேண்டும்.