உள்ளாட்சி தேர்தல்: நாம் தமிழர் கட்சி முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு…!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. அதன்படி விருப்ப மனு தாக்கல் செய்வது, வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது போன்ற பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில்நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடப் போகும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களுக்கான வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.

அதன்படி முதற்கட்டமாக 92 வேட்பாளர்களை அறிவித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உத்தரவிட்டுள்ளார். 5 மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகியிருக்கும் நிலையில் எஞ்சியுள்ள 4 மாவட்டங்களுக்கான பட்டியலும் விரைவில் வெளியாகும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *