உள்ளாட்சி தேர்தலில்…! அதிமுக ”மண்ணை கவ்வும்”…. மக்களை ”குழப்பாதீங்க” …!!

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மண்ணை கவ்வும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு  தெரிவித்தார்.

தமிழக அரசின் மீது தொடர்ந்து குற்றம் சுமத்தி வரும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை கண்டிக்கும் வகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, உள்ளாட்சித் தேர்தலுக்கான வரக்கூடியவர்களை உற்சாகப்படுத்துங்க. அங்க போயிட்டுதிமுக யாரையும் வேட்புமனு தாக்கல் செய்யவிடல, எங்களுடைய வேட்புமனுவை எல்லாம் திரும்பப் பெற்று இருக்கிறார்கள் என்று காஞ்சிபுரத்தில் அவர் பேசுகிறார். காஞ்சிபுரத்தில் அதிமுகவின் வேட்பு மனுக்கள் எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டதா ? 9 மாவட்டங்களில் தேர்தல் நடக்கிறது.

எல்லா இடத்திலும் அதிமுகவின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்படுகிறதா ? எங்க வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதோ அங்கே சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தக் கூடிய அதிகாரிகள் முடிவு எடுத்திருக்கிறார். தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் எல்லா இடத்திலும் மீண்டும் மீண்டும் மக்களிடத்தில் ஒரு குழப்பம் ஏற்படுத்துவதற்கு எடப்பாடி பழனிச்சாமி முயற்சிக்கிறார்கள். அவருடைய முயற்சி பலிக்காது, நாட்டு மக்கள் அதை நன்றாக உணர்ந்து கொண்டு இருக்கின்றார்கள். எனவே  உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக மண்ணை கவ்வ போவது  உறுதி.

உள்ளாட்சி தேர்தலில் யார் முறைகேடு செய்யப்போகிறது ? எதுவும் செய்ய முடியாது. வாக்குப்பெட்டியை போன தேர்தலில் மாற்றியது அவர்கள். அவர்கள் என்னென்னெ எல்லாம் செய்திருக்கிறார்களோ…  பாம்பின் கால், பாம்பறியும் என்பது போல….  தாங்கள் செய்திருக்கக் கூடிய தவறுகள் எல்லாம் இப்போது செய்வார்கள் என்று அவர்களாகவே ஒரு கற்பனையை நினைத்து கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட அவசியம் எங்களுக்கு இல்லை. மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பால் இருக்கிறார்கள்.

நான்கு மாதத்தில் முதலமைச்சர் செய்து இருக்ககூடிய சாதனைகள், அவர் நிறைவேற்றி இருக்க கூடிய வாக்குறுதிகள், அவர் எடுத்து வைத்திருக்க கூடிய திட்டங்கள்  மீது மக்கள் மிகுந்த நம்பிக்கையும், மிகுந்த ஆதரவும் தருகின்றார்கள். யாருடைய பெட்டியை,  யாரும் மாற்றவில்லை. மக்கள் ஏகோபித்த ஆதரவோடு திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி கட்சி  உள்ளாட்சித் தேர்தல் மகத்தான, மக்கள் ஆதரவோடு வெற்றி பெறுவோம் என பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *