பெங்களூரை சேர்ந்த 20 வயது இளம்பெண் உறைவிட பள்ளியில் படிக்கும் போது மோகன் குமார் என்பவரை சந்தித்துள்ளார். இருவரும் நெருக்கமாக பழகி காதலித்தனர். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி மோகன் குமார் பல்வேறு இடங்களுக்கு அந்த இளம் பெண்ணை அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். மேலும் அதனை வீடியோ எடுத்து வைத்துள்ளார். அந்த வீடியோவை காட்டி இளம்பெண்ணை மிரட்டி மோகன் குமார் இதுவரை 2.5 கோடி ரூபாய் வரை பணத்தை வாங்கியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், நகைகள், சொகுசு கார் ஆகியவற்றையும் பறித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் மோகன் குமாரை கைது செய்தனர். மேலும் அவர் பறித்து சென்ற நகைகள் சொகுசு கார் ஆகியவற்றை போலீசார் மீட்டனர்.