உலா வரும் நாய்கள்…. அச்சத்தில் பயணிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

நாய்களின் அச்சுறுத்ததால் எழும்பூர் ரயில் நிலையத்தில்  பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூர் மற்றும் புறநகர் ரயில் நிலையங்களில் நாய்கள் உலா  வருகின்றது. இதனால் பயணிகள் மிகவும் அவதிக்கு அவதிப்படுகின்றனர்.  இதுகுறித்து பயணிகள் தரப்பில்  கூறும்போது எழும்பூர் ரயில் நிலையத்தில், பயணிகள் அமர்ந்திருக்கும் இருக்கைகளுக்கு அருகில் நாய்கள் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருப்பதால் பயணிகள் மிகவும் அச்சத்தில் இருகின்றனர்.

மேலும் உணவு பொட்டலங்களை பிரித்து வைத்தவுடன் நாய்கள் அருகில்  சென்று நிற்பதால்  கடித்து விடுமோ என பயணிகள் மிகவும் அச்சத்தில் இருகின்றனர். இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் இது தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.  எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *