“உலக நாடுகள் பங்கேற்கும் போட்டி” தகுதியிருந்தும் நிதி இல்லை… சிறுமி வேதனை!!..

7  நாடுகள் பங்குபெரும் சிலம்பம் போட்டிக்கு தகுதி பெற்றும் போதிய நிதி வசதி இல்லாமல் மலேசியா செல்ல முடியாததால் தர்ஷினி வேதனை தெரிவித்துள்ளார். 

விருதுநகர்  மாவட்டம் சிவகாசி அருகே  திருத்தங்கள் கிராமத்தை சேர்ந்த சங்கரனாதனின் மகள் ஸ்ரீ தேவதர்ஷினி நன்காம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் சிலம்ப போட்டிகளில்பல  சாதனை படைத்துள்ளார்.  கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் நடைபெற்ற 7 நாடுகள் பங்கு பெற்றஆசிய சாம்பியன் ஷிப்  சிலம்ப போட்டியில்  மினி சப்-சீனியர் பிரிவில் ஸ்ரீ தேவதர்ஷினி  வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில் மலேசியாவில் நடைபெற இருக்கும் 7 நாடுகள் பங்கேற்க்கும் சிலம்ப போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார்.

எனினும் மலேசியா சென்று வர போதிய நிதிவசதி இல்லாமல்  தவிப்பதாக ஸ்ரீ தேவதர்ஷினி வேதனை தெரிவித்துள்ளார்.எனவே ஸ்ரீ தேவதர்ஷினி தமிழகஅரசு நிதி  உதவி அளித்து  மலேசியாவுக்கு செல்ல உதவ  வேண்டும் என்று  வேண்டுகோள் விடுத்துள்ளார். திறமை இருக்கும் குழந்தைகளின் வாழ்க்கையை ஒளியேற்ற  அரசு நிதிஉதவி செய்தால்  பயனுள்ளதாக இருக்கும் என ஸ்ரீ தேவதர்ஷினியின்  பெற்றோர் கோரிக்கை விடுகின்றனர்.