உலக அளவில் கலக்கும் BEAST…. இது வேற லெவல் சாதனை….!!!!

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் ஏப்ரல் 13ம் தேதி தியேட்டரில் ரிலீசான திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இதனையடுத்து, வசூல் ரீதியாக இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த நிலையில் சென்ற வாரம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் உலக அளவில் அதிகம் பார்க்கப்பட்ட படங்கள் பட்டியலில் பீஸ்ட் திரைப் படத்தின் இந்தி டப்பிங் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல தமிழ் வெர்ஷன் ஏழாவது இடத்தில் உள்ளது. ஏப்ரல் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பல சாதனைகளைப் படைத்த பீஸ்ட் மே 11ம் தேதி ஓடிடி தளங்களில் வெளியான நிலையில் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் சாதனை படைத்து வருகிறது.