ஜப்பானில் தயாரிக்கப்படும் இந்த ஐஸ்கிரீமின் விலை இந்திய மதிப்பில் சுமார் 5 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐஸ்கிரீம் தயாரிப்பதற்கு பிரதான மூலப்பொருள் இத்தாலியில் இருந்து வரவழைக்கப்படுகின்றது. அங்குள்ள ஆல்ஃபா நகர பகுதியில் வளர்க்கப்படும் வைட் ட்ரூபிள் எனப்படும் அரிய வகை வெள்ளை உணவுப் பொருள்தான் இந்த ஐஸ்கிரீமின் விலையை நிர்ணயிக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த ஐஸ்கிரீமை ருசித்தவர்கள் இதன் சுவையை விவரிக்க கடினமாக உள்ளது என்று கூறியுள்ளனர். மேலும் இது உலகின் மிக விலை உயர்ந்த ஐஸ்கிரீம் என்ற கிண்ண சாதனையும் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.