“உலகளவில் டிஜிட்டல் பணம் அதிகம் பயன்படுத்தும் நாடுகள்”…. முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா?…. லீக்கான தகவல்….!!!!

ஐ.நா. வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு சென்ற வருடத்தில் உலகளவில் அதிகமாக டிஜிட்டல் பணம் பயன்படுத்துபவர்களை கொண்ட நாடுகளை தரவரிசைப்படுத்தி இருக்கிறது. அதாவது முதல் 20 இடங்களை பிடித்த நாடுகளை பட்டியலிட்டு இருக்கிறது. அதன்படி முதலிடத்தில் உக்ரைன் இருக்கிறது. அங்கு 12.7 % பேரிடம் டிஜிட்டல் பணம் இருக்கிறது.

இதையடுத்து ரஷ்யா, வெனிசுலா, சிங்கப்பூர், கென்யா, அமெரிக்கா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது. இந்தியாவில் அதன் மொத்த மக்கள் தொகையில் 7.3 % பேரிடம் கடந்த வருடம் டிஜிட்டல் பணம் இருந்தது. இப்பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் இருக்கிறது. கொரோனா காலக் கட்டத்தில் வளரும் நாடுகள் உட்பட உலகம் முழுதும் டிஜிட்டல் பணத்தின் பயன்பாடு அதிகரித்து இருந்ததாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *