தமிழகத்தில் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் 1100 காளைகள் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மாடுபிடி வீரர் ஒருவரது மார்பில் காளை மாடு முட்டியதில் அவர் இறந்துவிட்டார்.

அதாவது நவீன் குமார் என்பவருக்கு காளை முட்டியதில் பலத்த  காயம் ஏற்பட்டதால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். மேலும் இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.