உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் பல லட்சம் கொள்ளை…. லட்டு கவுண்டரில் கைவரிசை…. பரபரப்பு….!!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகிறார்கள். அதன் பிறகு சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து திருப்பதி பிரசாதமாக லட்டு வாங்கி செல்கிறார்கள். இந்நிலையில் திருப்பதி-திருமலை தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி லட்டு வளாகத்தில் உள்ள 36-வது கவுண்டரில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இந்த கவுண்டரில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் உலக புகழ் பெற்ற கோவிலில் அவ்வளவு பக்தர்கள் கூட்டத்திற்கு மத்தியிலும் லட்டு கவுண்டரில் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பேசும் பொருளாக மாறியுள்ளது.

Leave a Reply