உலகநாயகன் நடிக்கும் “விக்ரம்”…. டிரைலரை வெளியிட்ட ராம் சரண்…. குஷியில் ரசிகர்கள்…..!!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் “விக்ரம்” படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத்பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். இதை கமல்ஹாசன் தன் சொந்த தயாரிப்பு நிறுவனம் ஆன ராஜ்கமல்பிலிம்ஸ் நிறுவனத்தின் வாயிலாக தயாரிக்கிறார். அனிருத் இசை அமைக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். வரும் ஜூன் 3ஆம் தேதி “விக்ரம்” திரைப்படம் வெளியாகயிருக்கிறது.
இத்திரைப்படத்தில் இருந்து கமல்ஹாசன் எழுதி பாடியிருந்த “பத்தல பத்தல” என்ற பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பையும், சர்ச்சைகளையும் சந்தித்தது. இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் ஆகியவற்றை சென்னையில் விழா அமைத்து ரசிகர்கள் மத்தியில் வெளியிடப்பட்டது. இதன் டிரைலரானது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இத்திரைபடத்தின் தெலுங்குடிரைலரை நடிகரான ராம்சரண் சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். தற்போது ரசிகர்கள் இதை வைரலாக்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *