“உற்சாகப்படுத்தும் படங்கள் வந்தால் தான் ரசிகர்கள் தியேட்டருக்கு வராங்க”…. முன்பை போல சினிமா மோகம் இல்லை…. வருத்தத்தில் பிரபல நடிகை…!!!!!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான லைகர் திரைப்படம் குறித்து நடிகை சார்மி பேசியுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லைகர் என்ற திரைப்படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். இந்த படத்தில் அனன்யா பாண்டே ஹீரோயினாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன் மற்றும் மைக் டைசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டப்படி படம் வெளியானது. எதிர்பார்த்த அளவிற்கு இத்திரைப்படம் இல்லை என இணையத்தில் விளாசி வருகின்றார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் இத்திரைப்படம் குறித்து நடிகை சார்மி கூறியுள்ளாதவது, ரசிகர்கள் வீட்டில் இருந்தவாறு நல்ல கதைகள் கொண்ட படங்களையும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களையும் ஒரே கிளிக்கில் பார்க்கும் நிலை இருக்கின்றது. அவர்களை உற்சாகப்படுத்தும் திரைப்படங்கள் வந்தால் மட்டுமே திரையரங்கிற்கு வருகிறார்கள். தெலுங்கில் வெளியான பிம்பி சாரா, சீதாராமம், கார்த்திகேயா 2 உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றன.

இத்திரைப்படங்கள் 150 கோடி இருந்து 175 கோடி வரை வசூல் செய்தது. தற்பொழுது தென் இந்தியாவில் முன்பை போல இப்போது சினிமா மோகம் இருப்பதாக தெரியவில்லை. கொரோனாவால் இத்திரைப்படத்தை உருவாக்க மூன்று வருடங்களானது. பல கஷ்டங்களுக்கு பிறகு இத்திரைப்படத்தை தயாரித்தோம். ஆனால் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கின்றது என கூறியுள்ளார்.