உறவினர் வீட்டுக்கு போன தேங்காய் வியாபாரி…! நோட்டமிட்டு புகுந்த கொள்ளையர்கள்… வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம் …!!

பாவூர்சத்திரத்தில் பூட்டி இருந்த வீட்டை உடைத்து 50 சவரன் நகையும் 1 லட்சம் ரூபாய் பணமும் திட்டு போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அருணாப்பேரி என்ற கிராமத்தில் பூமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தேங்காய் வியாபாரி, இவருக்கு சங்கர் என்ற ஒரு மகனும் இருக்கிறார். இவர் பிப்ரவரி 22ஆம் தேதி தனது மனைவியோடு மதுரைக்கு சென்றுள்ளார். இவரது மகனும்  புங்கம்பட்டியில் உள்ள அவரது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். இவர்கள் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.

இதனை அடுத்து வீட்டில் ஆளில்லாத நிலையில் அங்கு வந்த திருடர்கள் அவரது வீட்டின் பீரோவை உடைத்து 50 பவுன் நகையையும், ஒரு லட்சம் ரூபாய் பணத்தையும் எடுத்து சென்றனர். இதை அறியாத பூமணியின் மகன் சங்கர் தனது வீட்டிற்கு வந்து பார்க்கையில் கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் அங்குமிங்குமாக கிடந்தது. பதறிப்போன இவர் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருடப்பட்ட பொருள்களையும் திருடர்களையும் தேடிவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *