உறவினரை பார்க்க சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள புதுவிளாங்குடி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூரில் இருக்கும் உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு மணிகண்டன் அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மணிகண்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *