உறவினரை பார்க்க சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டில் திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் உறவினர்களை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ரவி அதிர்ச்சி அடைந்தார்.

அதன்பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ராஜா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *