உருளைக்கிழங்கு சீக்கிரம் முளைத்து விடுகிறதா…? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க… அப்படியே இருக்கும் ..!!!!

ஒரு சிலர் கடை தூரத்தில் இருக்கும் என்பதனால் மொத்தமாக காய்கறிகளை வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். இதனால் கெடாமல் வைத்துக்கொள்ள காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் உருளைக்கிழங்கை வெளியில் வைப்பதனால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். ஆனால் முளைக்க தொடங்கி விடும். அதை தடுப்பது எப்படி என்பது குறித்து இப்போது பார்க்கலாம். உருளைக்கிழங்குகள் எளிதில் அழுகும் தன்மை கொண்டது. என்றாலும் வெகு நாட்கள் இருந்தால் முளைக்கத் தொடங்கிவிடும். இது கிழங்கு வகை என்பதால் செடி முளைக்கத் தொடங்குகிறது. மேலும் இது சுவையில் பாதிப்பு ஏற்படுத்துகிறது.

முளைத்த உருளைக்கிழங்கில் உள்ள ஆல்கலாய்டுகள் மனிதர்களிடையே நச்சுத்தன்மை ஏற்படுத்துகிறது. வெயில் படாத இடத்தில் உருளைக்கிழங்கை வைப்பதன் மூலம் புதிதாக வைத்திருக்க முடியும். எனவே உருளைக்கிழங்கை வெப்பம் இல்லாத இருட்டான ஒரு இடத்தில் அல்லது பெட்டிகளில் வைக்க வேண்டும். உருளைக்கிழங்கை காயவைத்து வைப்பதனால் விரைவில் முளைப்பதில்லை. ஒரு பையில் பச்சை மூலிகைகள் எதையாவது சேர்த்து அதனுடன் உருளைக்கிழங்கை வைப்பதன் மூலம் முளைப்பதை தடுக்க முடியும்.

பழங்களையும் உருளைக்கிழங்கையும் ஒன்றாக வைப்பதன் மூலம் பழங்களில் உள்ள ஈரப்பதம் உருளைக்கிழங்கு அடைந்து அதிவிரைவில் முளைக்க வாய்ப்புள்ளது. எனவே இரண்டையும் தனித்தனியாக வைக்கவேண்டும். உருளைக்கிழங்கை 50 டிகிரி வெப்பநிலையில் உள்ள இடத்தில் வைக்க வேண்டும் என்பதற்காக குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டாம். வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து வைக்க வேண்டாம். ஏனெனில் வெங்காயம் உருளைக்கிழங்கைவேகமாக முளைக்கச் செய்யும். இதன் மூலமாக உருளைக்கிழங்கை முளைக்காமல் அடுத்து சில நாட்களாக அதைப் பாதுகாக்க முடியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *