உருமாற்ற வைரஸை எதிர்க்க…. இதுவே சிறந்த வழி… மருத்துவ நிபுணர்கள் வெளியிட்ட தகவல்…!!!!

கொரோனாவை   தடுக்கும் பேராயுதமாக தடுப்பூசி விளங்குவதால் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். பெரும்பாலானவர்கள் இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தியுள்ளனர். தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களை ஊசி போட வைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் செய்து வருகிறது. இதற்க்கிடையில் உருமாற்ற வைரஸ் தாக்கம் பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ளது.

அந்த உருமாற்று வைரஸை எதிர்க்கும் ஆற்றல் போஸ்டர் தடுப்பூசிக்கு  மட்டுமே இருப்பதாகவும், ஏற்கனவே செலுத்தி இருக்கும் தடுப்பூசிகளின் 6 முதல் 8 மாதங்கள் வரை தான் உடலில் இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான ஆய்வு முடிவுகள் தடுப்பூசியின் வீரியம் உடலில் ஆறு முதல் எட்டு மாதங்கள் வரையில் தான் இருக்கும் என்பதை உறுதிப்படுத்துவதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை முன்னால் டீன் டாக்டர் கூறியிருக்கிறார்.கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி 2 வகைகளை கொண்டுள்ளது.

ஆன்டிபாடிகள் மற்றும் செல்-மத்தியஸ்த நோய் எதிர்ப்பு சக்தியின் உற்பத்தியால் வெளிப்படுத்தப்படும் நோய் எதிர்ப்பு சக்தி. கொரோனா போன்ற வைரஸ் தொற்றில், நோய் எதிர்ப்பு சக்தியின் இருகரங்களும் கடுமையான நோயைத் தடுப்பதில் செயலில் பங்கு வகிக்கின்றன.மேலும் ஒரு அலை வந்தால் அதன் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என பூஸ்டர்களை முடிவு செய்ய காத்திருக்க முடியாது. 6 முதல் 8 மாதங்களுக்கு முன்பு இரண்டாவது டோஸை  எடுத்த  எவருக்கும் செயல்முறையை இப்போது தொடங்க வேண்டும். மேலும் சிறந்த செயல் திறனுக்கான தடுப்பூசிகளை கலக்கும் யோசனையையும் நாம் ஆராய்ந்து கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

மேலும் உஜாலா சிக்னஸ் மருத்துவமனையின் நிறுவனர் இயக்குனர் டாக்டர் சச்சின் பஜாஜ் அனைத்து வயதினருக்கும் பூஸ்டர் அரசாங்கம் விரைவில் அனுமதிக்க வேண்டும். சீனா மற்றும் ஹாங்காங்கில்  அலைகள் வேகமாக பரவுவதை கருத்தில் கொண்டு நாம் மிக கவனமாக இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *