கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செங்குட்டைபாளையம் பகுதியில் டிரைவரான கண்டீஷ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பேச்சியம்மாள் என்பதற்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் மது போதையில் கண்டீஸ்வரன் மூதாட்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தகாத வார்த்தைகளால் திட்டி உருட்டு கட்டையால் அடித்துள்ளார்.
இதனை தடுக்க வந்த மூதாட்டியின் மகன் காளிமுத்துவையும் கண்டீஸ்வரன் அடித்ததாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த காளிமுத்து, பேச்சியம்மாள் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கண்டீஸ்வரனை கைது செய்தனர்.