உயிர் போகும் நேரத்தில் நடந்த அதிசயம்… அக்காவின் அளவுகடந்த பாசத்தால் உயிர்பெற்ற தம்பி… நெகிழ்ச்சி…!!!

இங்கிலாந்து நாட்டில் மூளை பாதித்து ஒரு வாலிபர் உடல் உறுப்புகளை தானம் செய்யும் போது அவருக்கு யாரும் எதிர்பார்க்காத நிலையில் அதிசயம் ஒன்று நடந்துள்ளது

இங்கிலாந்து நாட்டில் lewisroberts(18) மற்றும் jaderobert (அக்கா)  என்பவர்கள் தன் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர் கடந்த 18ஆம் தேதி அன்று சாலையில் நடந்து  சென்று உள்ளார். அப்போது வேன் ஒன்று எதிர்பாராத வேளையில் இவர் மீது மோதியதால் ரத்த  வெள்ளத்தில் சாலையில் கிடந்துள்ளார். அதைப் பார்த்த போலீசார் உடனடியாக அவரை ஹெலிகாப்டர் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளை பாதிப்பு நோய்  ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தார்கள். மேலும் இந்த நோய் பாதித்தவர்களால் மூச்சுவிட முடியாது, கைகால் அசைக்க முடியாது, கண்ணிமைக்க முடியாது, படுத்த வாக்கில் தான் இருக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதனால் இவரைicuயில் நான்கு நாட்கள் மருத்துவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். அதனால் அவருக்கு மூச்சு விட  செயற்கை சுவாசத்தை பொருத்தி இருந்தனர். மருத்துவர்கள் அவருடைய குடும்பத்தினரிடம் தங்களுடைய மகன் பிழைக்க மாட்டான் என்று கூறி உள்ளனர் இதனால் மனமுடைந்து போன அவருடைய அக்கா மற்றும் தாய், தந்தை ஆகியோர் மிகுந்த வேதனையோடு கண்ணீர்விட்டு கதறி கொண்டிருந்தனர். அவரது பெற்றோர் தன் மகனின் உடல் உறுப்புகளை 7 பேருக்கு தானம் செய்ய உள்ளதாக தெரிவித்தார்கள். அதனால் அவரது உடல் உறுப்புகளை அகற்றுவதற்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டியது இருக்கும். அதனால் அவருக்கு செயற்கை சுவாசம் போடப்பட்டுள்ளது.

அதனை அடுத்து அவரின்  அக்கா தன் தம்பி மீது அளவுகடந்த பாசம் கொண்டதால் icuயில் தம்பியை பார்க்க சென்றார். அங்கு தன் தம்பியின் அருகில் அமர்ந்து கொண்டு அவரது கையை பிடித்துக் கொண்டு கண்ணீர் மல்க பேசிக் கொண்டே இருந்துள்ளார். அப்போது அவர் என் தம்பியுடன் கடைசியாக பேசப் போகிறேன் என நினைத்துக் கொண்டு உள்ளார் .அதன்பிறகு அவர் தம்பி நான் ஒன்று, இரண்டு, மூன்று, என சொல்லுவேன் உடனே நீ சுவாசிக்க வேண்டும் என தன் மனதில் தோன்றியதை அவரிடம்  தெரிவித்தார். அப்போது அங்கு உடனே செவிலியர்கள் வந்து அறுவை சிகிச்சைக்கு நேரம் ஆகிறது எனவே நீங்கள் வெளியில் செல்லலாம் என்று கூறியுள்ளனர். அப்போது அவர் கடைசியாக டேய் தம்பி நான் சொல்ல போகிறேன் என ஒன்று, இரண்டு, மூன்று, என்று  சொல்லி உள்ளார்.

அப்போது திடீரென சினிமாவில் நடப்பது போல அவர் சொல்லி முடித்ததும் அவர் மூச்சு விட ஆரம்பித்துள்ளார்.  இதைப் பார்த்துக்கொண்டிருந்த செவிலியர்கள் அதிர்ச்சி அடைந்து உடனே மருத்துவர்களை அழைத்துள்ளனர். மருத்துவர்கள் அவரை பரிசோதித்து போதுஅவர்  சுவாசிக்க ஆரம்பித்து விட்டார் என்று  அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் கண்களை சிமிட்ட தொடங்கினார். இதைப் பார்த்த மருத்துவர்கள் ஆடிப் போனார்கள். அதனால் அவர்கள் மூளைச்சாவு அடைந்த ஒருவர் மீண்டும் உயிர் பெறுவது உலகிலேயே இது இரண்டாவது முறையாகும் என்று கூறினர். தற்போது அவர் கால்களை அசைக்கும், தலையசைக்கும், கண்ணிமைக்கும், வாய் பேசவும்  தொடங்கியுள்ளார். இறந்துவிட்டதாக கருதி உடல் உறுப்புகளை தானம் செய்யலாம் என்று முடிவு செய்த நிலையில் அவர் உயிர் பிழைத்துள்ளார். இந்த  சம்பவம் மொத்த குடும்பத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.