உயிருக்கு போராடிய பசுமாடு…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சங்கர்களம் பகுதியில் விவசாயியான சடையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 10 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு எதிர்பாராதவிதமாக 50 அடி ஆழமுடைய கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

மாட்டின் சத்தம் கேட்டு ஓடி வந்த சடையப்பனின் குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களின் உதவியுடன் போராடி கயிறு கட்டி பசுவை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.