உயிருக்கு போராடிய காட்டுபன்றி…. பொதுமக்கள் அளித்த தகவல்…. வனத்துறையினரின் செயல்…!!

கிணற்றில் தவறி விழுந்த காட்டுபன்றியை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அருகே இருக்கும் இன்கோ நகரில் கிணறு அமைந்துள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டுப்பன்றி அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதனையடுத்து காட்டுப்பன்றி உயிருக்கு போராடி கொண்டிருந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் கயிறு கட்டி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காட்டுப்பன்றியை பத்திரமாக மீட்டனர். அதன் பிறகு காட்டு பன்றியை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். விரைவாக செயல்பட்டு காட்டு பன்றியை காப்பாற்றிய வனத்துறையினரை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *