உயர்கல்வி படிக்க விரும்பும் ஏழை மாணவர்களுக்காக எல்ஐசி கோல்டன் ஜூப்ளி பவுண்டேஷன் திட்டத்தை கொண்டு வந்தது. அந்த திட்டத்தில் மாணவர்கள் இன்று முதல் டிசம்பர் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த நிலையில் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, டிப்ளமோவில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்த நிலையில் ஆண்டுக்கு ரூ.20,000 என படிக்கும் காலம் முடியும் வரை அந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் 2.50 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு https://licindia.in/ என்ற இணையதளம் மூலமாக அறியலாம்.