உயர்நீதிமன்றம்: வழக்கறிஞர்கள் – போலீசார் பரபரப்பு…!!

சென்னை உயர் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர்கள் போலீஸ்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கு ஒன்றில் வழக்கறிஞரை கைது செய்து போலீஸ் வந்தபோது சில வழக்கறிஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாரை முற்றுகையிட்டுள்ளனர்.

இதனால் பாரிமுனையில் 40 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் போலீசார் குடித்து விட்டு வந்ததாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.