“உப்பு தின்னா தண்ணி குடிச்சு தான் ஆகணும்!”…. ரெய்டில் சிக்கிய மாஜி அமைச்சர்…. தத்துவம் சொன்ன ராஜ கண்ணப்பன்….!!!!

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது.

அந்த வகையில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து குவித்ததாக அவருடைய மனைவி உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ராஜ கண்ணப்பன் “தப்பு செய்தால் தண்டனை அனுபவிப்பது இயல்பு தானே. உப்பு தின்னவன் தண்ணி குடிச்சு தான் ஆகணும்” என்று பதிலளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *