உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிஜ்சனூர் பகுதியில் ரயில் தண்டவாளம் அமைந்துள்ளது. இங்கு குடிபோதையில் போதை ஆசாமி ஒருவர் படுத்து கிடந்தார். அப்போது வேகமாக வந்த ரயில் ஒன்று அவரின் மீது ஏறி இறங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது தண்டவாளத்தில் அவர் அசந்து தூங்கியது தெரிய வந்தது.

அவரை காவல்துறையினர் எழுப்பிய போது தான் அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. அதோடு அவர் தண்டவாளம் என்று கூட அறியாமல் அங்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார். ஆனால் இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அவரின் மேல் ரயில் சென்று நிலையிலும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துக் கொண்டார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீ போல் வைரலாகி வருகிறது.