“உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டம்”… பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்…!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் கழிவை கலந்தவர்களை கைது செய்யக்கோரி நாகை உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து 10-கும் மேற்பட்ட போலீசார் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அறிவித்தபடி காங்கிரஸ் கட்சியினர் நேற்று உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி எஸ்.சி பிரிவு தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கியுள்ளார்.

இதனை காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் அமிர்தராஜா தொடங்கி வைத்துள்ளார். இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியுள்ளனர். அந்த வகையில் வேங்கை வயல் கிராமத்தில் இரட்டை குவளை முறையை ஒழிக்க வேண்டும். குடிநீர் தொட்டியில் கழிவுகளை கலந்த மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.