அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக வேண்டுமென்று சமீப காலமாக பல அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க உள்ளதாகவும் கடந்த சில நாட்களாகவே செய்திகளும் வெளியாகி கொண்டிருக்கின்றன. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அதேசமயம் ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு பிறகு தான் உதயநிதியை துணை முதல்வர் என கூற வேண்டும் என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆனால் மகிழ்ச்சி என சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், சினிமாவில் இருந்து முதல்வராவது எல்லாம் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தோடு போய்விட்டது. சினிமாவில் இருந்து வந்து முதல்வராகும் எண்ணத்தில் இருப்பவர்களின் கனவுகளை பொய்யாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.