உதயநிதி எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் தெரியுமா?… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.

அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைத்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் மக்களை கவரும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனை அடுத்து ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் விருப்ப மனு அளித்து வருகிறார்கள். அதன்படி குளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட விருப்பமான தந்த திமுக தலைவர் ஸ்டாலினிடம் திமுக நிர்வாகிகள் நேர்காணல் நடத்தினார். அதனைப்போலவே சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தந்த உதயநிதியிடம் நேர்காணல் நடந்தது. இதன் மூலம் உதயநிதி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *