“உதயநிதிக்கு நோபல் பரிசு கொடுக்கணும்”…. கிண்டலாக பேசிய EPS…..!!!!!

2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி  தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் 2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டத.

இந்நிலையில் நீட் தேர்வு ரகசியத்தை சொன்ன உதயநிதிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று இபிஎஸ் கிண்டலாக பேசியுள்ளார். பட்ஜெட் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலுக்குப் பிறகு நீட் தேர்வு ரத்து ரகசியத்தை சொல்லுவோம் என்று கூறிய உதயநிதி, அதற்கான சட்டப் போராட்டம் நடத்தி வருவது தான் அந்த ரகசியம் என்று இப்போது சொல்கிறார். ஏன் நாங்கள் சட்டப் போராட்டம் நடத்தவில்லையா? என்று இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.