தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். இவர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ள இடம் மாவட்டங்களை ஆய்வு செய்து வருகிறார். இவர் விழுப்புரத்தில் ஆய்வு மேற்கொண்ட நிலையில் கடலூரில் மழை பாதித்த இடங்களை பார்ப்பதற்காக சென்றார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் உதயநிதி ஸ்டாலினின் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர் வருவதைப் பார்த்த மக்கள் கோபத்தில் கொந்தளித்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய காரில் அங்கிருந்து உடனடியாக கிளம்பிவிட்டார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை வெளியிட்டவர் கடலூரில் மக்களை சந்திக்க உதயநிதியை மக்கள் விரட்டியடித்தனர் என்று கூறி பதிவிட்டுள்ளார். மேலும் தமிழகத்தின் துணை முதல்வர் வருகைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த விஷயம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.