உண்மையாக நடக்கும் கும்கி பட நிகழ்வு.. அதிர்ச்சியில் ஆழ்த்திய கேரளாவில் நடந்த சம்பவம்..!!!

கேரளாவில் அரிக்கொம்பன் யானையை பிடிக்க கும்கிகள் மூலம் ஒத்திகை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சந்தன்பாறை பகுதியில் மக்களிடம் பிரபலமானது அரிக்கொம்பன் யானை. அரிசி விரும்பியான இந்த யானை அடிக்கடி ஊருக்குள் புகுந்து வயல்வெளிகளை சேதப்படுத்தி வந்தது.

மேலும் மக்களை அடிக்கடி தாக்கியதில் உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த யானையை உடனடியாக பிடிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து அரிக்கொம்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் இரண்டு கும்கி யானைகளை வரவழைத்தனர். இந்நிலையில் வரும் 29ஆம் தேதி அரிக்கொம்பன் யானையை பிடிக்க ஒத்திகை பயிற்சி கும்கி யானைகள் மூலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.