உடைந்து கிடந்த கதவு…. காட்டிகொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் விசாரணை…!!

கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அணுக்கோடு பகுதியில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நடக்க நகைக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜ் பதற்றத்துடன் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது கடையில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ராஜ் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதில் இரண்டு முகமூடி கொள்ளையர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *