“உடுமலை-மூணாறு சாலையில் அதிகரித்த யானைகள் நடமாட்டம்”…. வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை….!!!!!

உடுமலை மூணாறு சாலையில் கூட்டம் கூட்டமாக யானைகள் உலா வருகின்றது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையிலிருந்து மூணாறு செல்லும் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் யாரும் செல்பி எடுக்க முயற்சி செய்யக்கூடாது என வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். உடுமலை, அமராவதி ஆகிய இடங்களில் வனவிலங்குகள் ஏராளமாக வாழ்ந்து வருகின்றது.

இந்த வனவிலங்குகளுக்கு மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் இருந்து வரும் ஆய்வுகளின் மூலம் தான் தண்ணீர் கிடைக்கின்றது. இந்நிலையில் கோடை வெப்பத்தின் காரணமாக ஆறுகள் வறண்டு காட்சியளிக்கின்றது. இதனால் வன விலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்றது. இதனால் யானைகள், மான்கள், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் அடிவாரப் பகுதிக்கு வந்து விடுகின்றது.

யானைகள் காலை நேரத்தில் உடுமலை மூணாறு சாலையை கடந்து வனப் பகுதிகளுக்கு செல்வது மாலையில் மீண்டும் வருவதுமாக இருக்கின்றது. அப்போது சில வாகன ஓட்டிகள் அதிக சத்தத்தை எழுப்பி யானைகளுக்கு தொந்தரவு தருவதால் யானைகள் வாகன ஓட்டிகளை துரத்தி செல்கின்றது. ஆகையால் உடுமலை-மூணாறு சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அமைதியாக பயணம் செய்யுமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் அவற்றின் மீது கற்களை எறிவது, செல்பி எடுப்பது, புகைப்படம் எடுப்பது என முயற்சிக்க கூடாது என அவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *