பீகார் மாவட்டத்தில் பரவுனி ரயில் நிலையத்தில் பெட்டிகளை இன்ஜினுடன் இணைக்கும் கப்ளிங்கை பிரிக்கும் பணியில் ரயில்வே ஊழியர் ஒருவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டுக்கும் இடையே சிக்கி ரயில்வே ஊழியர் உடல் நசங்கி பரிதாபமாக உயிரிழந்தார். லோகோ பைலட் இன்ஜினை முன்னோக்கி இயக்குவதற்கு பதிலாக பின்னோக்கி இயக்கியதால் இந்த விபரீதம் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சுற்றி இருப்பவர்களின் அலறல் சத்தம் கேட்டதும் லோகோ பைலட் இறங்கி ஓடிவிட்டதாகவும் தெரிகிறது. இது குறித்து அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஊழியரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.