
சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் ஹார்லேஸ் சாலையில் ஒரு ஜிம் அமைந்துள்ளது. இங்கு உடல் எடையை குறைப்பதற்காக 30 வயது பெண் சென்றார். அந்த பெண்ணுக்கு சவுகார்பேட்டை சேர்ந்த சூர்யா என்பவர் பயிற்சி அளித்து வந்தார். இருவரும் நண்பர்களாக பழகினர். இந்த அளவில் சூர்யாவின் நடத்தை பிடிக்காததால் கடந்த நவம்பர் மாதம் ஜிம் நிர்வாகம் அவரை பணியில் இருந்து நீக்கம் செய்தது. அது மட்டும் இல்லாமல் சூர்யாவின் தகாத நடத்தை காரணமாக அந்த பெண்ணும் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.
இதனால் கோபம் அடைந்த சூர்யா கடந்த 13 ஆம் தேதி ஜிம்மிற்கு சென்ற அந்த பெண்ணை சந்தித்து பேசி உள்ளார். மீண்டும் தன்னிடம் பேசாவிட்டால் உனது புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு உனது குடும்பத்தினரிடமும் கூறுவேன் என சூர்யா பெண்ணை மிரட்டி தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சூர்யாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.