உடலில் ஏற்படும் சின்ன, சின்ன பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு.. எளிமையான டிப்ஸ்..!!

நெருக்கடிக்கு இடையிலான பரபரப்பான வாழ்க்கை சூழலில் பெரும்பாலானவர்களின்  உடல்ரீதியாக சின்ன, சின்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது அதற்கு ஏற்ற சிறந்த டிப்ஸ்..!

ஒற்றைதலைவலி:

துளசி இலைகளோடு சிறிது சுக்கு, லவங்கம் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குறையும். இலைகளை நசுக்கி அரை டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கஷாயமாகக் காய்ச்சி அதில் பனைவெல்லம் போட்டு சாப்பிட்டால் தலைசுற்றல் நிற்கும்.

சிறுநீரக கற்கள் கரைய:

வயது வித்தியாசமின்றி சிறுநீரகத்தில் கல் என்ற பிரச்சனைகள் இளைஞர்களை வாட்டி வதைத்து வருகின்றது. இதற்கு வாழைத்தண்டு சாறு மிகவும் உகந்ததாக இருக்கிறது. ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் வாரத்திற்கு 2 முறையும் கொள்ளளவு அதிகமாக இருந்தால், மூன்று முறை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் நெருஞ்சில், தனியா இவை இரண்டையும் சம அளவு எடுத்து அதனுடன் காய்ந்த மல்லிகைப்பூ, பிள்ளை பூ சேர்த்து கசாயம் வைத்து காலை, மாலை என இரு வாரங்களுக்கு குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் மறையும்.

ரத்த கட்டை சரி செய்ய:

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும் என ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. இந்த ஒரு நாளைக்கு ஒன்று என்ற பழக்கம், நெல்லிக்காய்க்கும் பொருந்தும். இவற்றில் வைட்டமின் சி மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. இவை இரண்டும் ரத்த கட்டை சரி செய்வது மட்டுமின்றி நச்சு நீக்கியாகவும் செயல்படுகின்றது. நெல்லிக்கு உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை ஏற்படுத்தும் ஆற்றல் உண்டு. இதை பழம் அல்லது சாறு என எப்படி உட்கொண்டாலும் குளிர்ச்சியால் ஏற்படும் நோய்கள் குணமாகும்.

வாத நோய்களுக்கு மருந்தாக:

வாதநாராயணன் கீரை அனைத்து நோய்களுக்கும் மருந்தாக இருக்கிறது. கீல் வாதம், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி, கை, கால் குடைச்சல், மூட்டு வீக்கம், இடுப்பு வலி, இளம்பிள்ளை வாதம், சன்னி, மேகநோய் ஆகியவை குணமாகும். இவை இரண்டையும் சம அளவு எடுத்து பொடி செய்து சூடான பாலில் கலந்து குடித்து வந்தால் நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம் போன்றவை சீராகும்.

உயிர்சத்துக்கள் நிறைந்த கொய்யாப் பழம்:

பழங்களில் விலை குறைவானதும் அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப் பழத்தில் உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும்  நிறைந்துள்ளன. அது  மட்டுமல்லாது இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டவை. வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யா பழம் உதவுகிறது. கொய்யாப்பழத்தின் தோலில் தான் அதிக சத்துக்கள் இருக்கின்றது.

மூட்டு வலி நீங்க:

முடக்கத்தான் கீரை, வாதநாராயணன் கீரை ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து அவற்றோடு பூண்டு, மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் அனைத்து விதமான மூட்டு வலிகள் குணமாகும். ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் மீன்கள், கீரைகள், பால், ஆளி விதை போன்ற உள்ளிட்ட உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது.