உடனே பள்ளிக்கு சீல் வையுங்க…. கைது செஞ்சு நடவடிக்கை எடுங்க… எச்.ராஜா பரபரப்பு பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் லாவண்யா என்கின்ற பெண், அவருடைய பெற்றோர்கள் முன்னிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே அந்த பள்ளியை நடத்துகின்றவர்கள் , கிருஸ்துவ மதத்திற்கு மாறு, காரணம் என்னவென்றால் அந்த பெண் 500க்கு 488 மார்க் 10வதில் வாங்கினதும்…  அது கிருஸ்துவ பெண்ணாக இருக்க வேண்டும் அப்படின்னு சொல்லி நீ கன்னியாஸ்திரியாக மாறு, அதனால குடும்பத்தோடு மாறவேண்டும் என நிர்பந்தம் செய்துள்ளார்கள்.

அந்த பெண்ணும் அவருடைய பெற்றோர்களும் மறுத்துள்ளார்கள். அதனால் எல்லா கீழ்தரமான கடுமையான வேலைகளையும் செய்யச்சொல்லி அந்த பெண்ணை நிர்பந்தத படுத்தி இருக்கிறார்கள், அதாவது கக்கூஸ் கழுவுகின்ற அளவுக்கு… நான் கேட்கிறேன் என் அந்த சிஸ்டர் கக்கூஸ் கழுவ மாட்டார்களா ? எவ்வளவு தூரம் பாருங்க…  கிருஸ்துவ மத மாற்றம், மத வெறி கூட்டம் தான் கல்வி நிலையங்களாக இன்றைக்கு இருந்துகொண்டு இருக்கு.

ஆகவே அந்த பெண் பூச்சி மருந்தை குடித்து இறந்து போயிருக்கு. அந்த பெண்ணை முன்னாடி யாரோ முகமது அலி மாசிஸ்த்ரேட் அவர் போய் மரண வாக்குமூலம் வாங்கினதாக சொல்ற  வீடியோ இன்னும் வெளியிடவில்லை. அறிக்கை மட்டும் தான் வெளியிட்டுள்ளார்கள். ஆகவே அதில் இருந்தே நமக்கு பல சந்தேகங்கள் வருகிறது. ஆனால் 17ஆம் தேதி முத்துவேல் என்பவர் விசுவ ஹிந்து பரிச்சியத்தின் காரியகர்த்தா அந்த பெண்ணை பார்க்க சென்றபோது அந்த பெண் சொன்னவற்றை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

இப்போ வெளியிட்டதனால் தான் இந்த கல்லூரி நடத்துற போர்வையில் மத வியாபாரிகளின் மத வெறிச்செயல் வெளியே வந்திருக்கு. ஆக உடனடியாக அந்த பள்ளியை சீல் வைக்க வேண்டும். ஏனென்றால் அந்த பள்ளி வந்து அரசு உதவி பெறும் பள்ளி என்று எனக்கு தகவல்.

மக்கள் வரி பணத்தில் நடத்துகின்ற பள்ளியில் நீங்கள் மதப்போதனையே செய்யக்கூடதே, அப்புறம் தானே மத மாற்றம். சர்ச்ல நடத்தலாம் பிரேயர்…  பள்ளிகூடத்தில் நடத்த முடியாது, நீங்கள் கிருஸ்துவ நிர்வாகத்தில் நடத்தினால் அது வேறு, இது அரசு உதவி பெரும் பள்ளி என்று சொன்னால்  அது சட்ட விரோதம். அப்படி சட்ட விரோத செயல்பட்ட நபரை இதுவரை கைது செய்யவில்லை.

கைது பண்ல் மட்டுமல்ல, மாவட்ட எஸ்.பி. இதுக்கு ஒரு குழு போட்டுள்ளேன், அந்த குழு ஒரு வாரத்தில் அதனுடைய அறிக்கையை சமர்பிக்கனும்ன்னு சொன்னா அந்த இறப்புக்கு காரணம் என்னன்னு அந்த குழு விசாரணைக்கு பிறகு தானே முடிவுக்கு வர முடியும். ஆனால் இவர்கள் பத்திரிகையாளர்களை கூப்பிட்டு மதமாற்றம் பிரச்சனை இல்லை என்று கூறியுள்ளார்கள். அதுல எந்த வித நியாயமும் கிடைக்காது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *