தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜருகு பகுதியில் அருள் தேவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுநாதன் என்ற கணவர் உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அருள் தேவி தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.

அதில் தனது கணவர் வேறு ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாகவும், அவரது உறவினர்கள் அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரியின் பேரில் மஞ்சுநாதன் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.