உச்சத்தில் கொரோனா தொற்று… அதிகரித்து வரும் பலி எண்ணிக்கை… தீவிரப்படுதப்படும் கட்டுப்பாடு நடவடிக்கைகள்…!!

கொரோனா நோய்தொற்றுக்கு வாலிபர் பலியானதை தொடர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 167 ஆக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் வசித்து வரும் வாலிபர் ஒருவர் காய்ச்சல் மற்றும் சளி தொல்லை அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால் மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 167 அதிகரித்துள்ளதாக சுகாதார துரையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *