சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படம் தீயாக பரவி வருகிறது. அதாவது திருமணத்தில் மணப்பெண் பிகினி உடையில் வந்து திருமணம் செய்து கொள்வது போன்று இருக்கிறது. இந்த சம்பவம் லக்னோவில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில் இதை பார்த்த நெட்டிசன்ஸ் கடுமையாக விமர்சித்தனர். அதாவது அந்த மணப்பெண் கலாச்சாரத்தை மீறி விட்டதாகவும் வரைமுறையில்லாமல் பிகினி உடையில் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினர்.

இப்படி பிகினியில் வந்து திருமணம் செய்தது மிகவும் தவறு என்று விமர்சித்த நிலையில் அது ஏஐ புகைப்படம் என்று ஊடகங்கள் உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் அது உண்மையான போட்டோ கிடையாது என்றும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்று ஊடகங்கள்  உறுதிப்படுத்தி உள்ளதால் அது ஒரு போலி செய்தி என்பது தெரியவந்துள்ளது.