
மதுரை மாவட்டம் வயல் காட்டு சாமி தெருவை சேர்ந்தவர் ராமரத்தினம். இவரது மனைவி மீனலோசினி(61). இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் ராமரத்தினத்திற்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் மீனலோசினி திடீரென உயிரிழந்து வந்துவிட்டார். உடனே ராமரத்தினம் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்ததால் மீனலோசினி உயிரிழந்ததாக போலீசாரிடம் கூறியுள்ளார். இதனால் மீனலோசினியின் உடலை போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் மீனலோசினியை கட்டையால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது ராமரத்தினம் தனது மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.