கரூர் வெங்கமேடு பகுதியில் மனைவி மற்றும் மகளை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு வாலிபர் மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செல்வகணேஷ் என்பவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி கல்பனாவும் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதியினருக்கு ஐந்து வயதுடைய ஒரு மகள் இருந்துள்ளார். தற்போது கல்பனா ஆறு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
குடும்ப பிரச்சினை மற்றும் கடன் தொல்லை காரணமாக குழந்தை, மனைவியை கொலை செய்துவிட்டு செல்வகணேஷ் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. அப்போது அருகில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு மயங்கி கிடந்த செல்வ கணேஷை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் இறந்து கிடந்த கல்பனா மற்றும் அவரது குழந்தையின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது.