இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அரசு பணி மற்றும் பல்வேறு அலுவலக பணிகளுக்கும் ஆதார் கார்டு அவசியமாக உள்ளது. இதனிடையே புதிதாக சிறந்த குழந்தைகளுக்கு ஆதார் எடுப்பது குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வருவதால் இவர்களுக்கு ஆதார் அட்டை எடுப்பது எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ஆதார் அட்டை பெறுவதற்கு ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் எடுத்துக் கொண்டு அருகில் உள்ள ஆதார மையம் அல்லது தாலுகா அலுவலகத்திற்கு சென்று ஆதார் அட்டை பெற விண்ணப்பிக்கலாம். ஒருவேளை பிறப்புச் சான்றிதழ் இல்லை என்றால் மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் சான்றிதழை வைத்து குழந்தைக்கு ஆதார் எடுக்கலாம். ஆதார் அட்டை எடுப்பது குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது போன்ற பணிகளுக்கு உதவியாக இருக்கும் என்பதால் குழந்தைகளுக்கு ஆதார் எடுக்கும் போது பயோமெட்ரிக், கைரேகைகள் மற்றும் கண் விழித்திரை ஸ்கேன் செய்யப்பட மாட்டாது. எனவே ஆதார் அட்டை எடுப்பதற்கு எந்த விதமான வயது வரம்பும் கிடையாது.