உங்க போனில் இருந்து உடனே இந்த Appsகளை நீக்குங்க…. திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

5 மால்வேர் செயலிகளை கூகுல் நிறுவனம் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.  அதன்படி PIP Pic Camera Photo Editor, Wild & Exotic Animal Wallpaper, ZodiHoroscope, PIP கேமரா 2022, Magnifier Flashlight ஆகிய செயலிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த செயலிகள் டேட்டா திருட்டில் ஈடுபடுவதால் பயனர்கள் உடனடியாக இந்த செயலியை நீக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கடந்த மாதம் கண்டறிந்துள்ளனர். அவ்வாறு கண்டறியப்பட்ட செயலிகள் 2 மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற செயல்களை பலரும் பயன்படுத்தி வருகின்றனர் . தேவையற்ற விளம்பரங்களை காட்டும் ஆட்வேர் செயலிகள் பயனரின் அனுபவத்தை கெடுக்கின்றது. பேட்டரியின் திறனை குறைக்கும். உங்கள் போனின் வெப்பத்தை அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் அங்கீகரிக்கப்படாத கட்டணங்களையும் வசூலிக்கலாம். மேலும் இந்த செயலிகள் ரிமோட் ஆபரேட்டர்கள் மூலமாக விளம்பரங்களை கிளிக் செய்யும் படி விலக்கை வலியுறுத்தி பணம் பெற முயற்சிக்கும். எனவே இது போன்ற செயலிகள் ஆபத்து நிறைந்தது என்பதால் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *